Business and Personal web pages from India Search result

Mayiladuthurai

Mayiladuthurai

மயிலாடுதுறை @ மாயவரம் நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது :-) மாயூரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின் மயிலாடுதுறை ஆனாலும் தேவார திருப்பதிகத்தில் திரு மயிலாடுதுறையாகவே குறிப்பிடப்பட்ட்டுள்ளது! ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஒரு சிறப்பு பெயர் எத்தனை எத்தனையோ ஊர்கள் இருந்தாலும் எத்தனைய் எத்தனையோ சிறப்புக்கள் வாய்த்திருந்தாலும் மாயூரம் தனிச்சிறப்பு மிக்க ஊர் என்ற பதத்தில் இவ்வரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.! ஆற்றின் கரைகளில்தான் மயிலாடுதுறையின் மகத்துவம். காவிரி ஆறு செல்லும் பகுதியினை சுற்றி உருவாக்கப்பட்ட ஊர். நகரின் மையப்பகுதியில் காவிரி தவழ்ந்து செல்கிறாள் - கரை நிரையும் காலங்களில், ஊர் அழகு நிறையும் காட்சி! மயிலாடுதுறை இரண்டு சிறிய ஊர்களும் அடக்கம்! திருவிழந்தூர் கூறைநாடு! திருவிழந்தூர் வைணவ திருத்தலம் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்! கூறை நாடு 9 கஜம் கூறை புடவைக்கு பெயர் பெற்ற ஊராக, குடிசைத்தொழிலாக இன்றும் விளங்குகிறது! கர்நாடக சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாக இருக்கிறது! முதல் தமிழ் நாவல் எழுதிய பிரதாப முதலியார் வாழ்ந்த இடமாக வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன. சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..! கோயில் திருவிழாக்களுக்கு ஒரு போதும் குறைவில்லாதபடி ஊர் எங்கும் நிறைந்திருக்கும் சிவன் கோவில்களும், ஊரின் எல்லையில் அமைந்து சைவ சமய வளர்ச்சிக்கு பெரிதும் சேவைகளை மிக மெளனமாய் செய்து வரும் தருமை ஆதீனமடமும் கூட ஊரின் சிறப்பாய் பெருமை பொங்க உலகுக்கு சொல்ல முடியும்! கடந்த பத்தாண்டுகளில் படு வேகமான வளர்ச்சி கண்டு பல புதிய கல்லூரிகள், பள்ளிகள் என்று நகரின் வேகம் எம்மை வியக்கவைத்துக்கொண்டே இருக்கிறது!